திருவெறும்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

திருவெறும்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தில் மாற்றுக்கட்சியினர் இணைந்தனர்.

Update: 2021-03-12 11:30 GMT
திருச்சி,

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசார களம் சூடு பிடித்துள்ள நிலையில் ஆட்சி மாற்றத்தின் மூலம் மாபெரும் சமூக மாற்றத்தை இந்த தேர்தலில் கொண்டு வருவதற்கு பொதுமக்கள் பெரும் எதிர் பார்ப்புடன் இருக்கிறார்கள்.  ஊழலற்ற ஆட்சி அமைக்கவும்,  ஓட்டுக்கு பணம் இல்லை என்று கொள்கைகளில்  பிடிவாதமாக இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு  ஆதரவு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு இருக்கிறது.

இதற்கு சான்றாக திருச்சி திருவெறும்பூர் தொகுதி வட்டார இளைஞர் காங்கிரசை சேர்ந்த விஜயகுமார் தனது ஆதரவாளர்கள் சுமார் 30 பேருடன் திருவெறும்பூரிலுள்ள உள்ள  மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாவது தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எம்.முருகானந்தம்  முன்னிலையில் மக்கள் நீதிமய்யத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ஆனந்தகுமார், தொழில் முனைவோர் அணி மாநிலத்துணைச் செயலாளர் அய்யனார், நற்பணி மாவட்ட செயலாளர் ஜானி பாஷா, ஒன்றிய செயலாளர் சூரியூர் சக்தி, நகரச் செயலாளர் மலை.எச்.ஆனந்தன்  ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்