கொண்டலாம்பட்டியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
கொண்டலாம்பட்டியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்தனர்.
கொண்டலாம்பட்டி,
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள மாதேஸ்வரன் கோவில் காடு பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 24). சம்பவத்தன்று வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடியவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொண்டலாம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் அந்த வாலிபர், கொண்டலாம்பட்டியை சேர்ந்த ரமேஷ்குமார் (27) என்பதும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மதன்குமார் வீட்டின் முன்பு திருடப்பட்டது எனவும் தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை மீட்ட போலீசார் ரமேஷ்குமாரை கைது செய்தனர்.