சேலம்:வழிப்பறி வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது

சேலம் வழிப்பறி வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

Update: 2021-03-12 06:18 GMT
சேலம்,

ஏற்காடு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மகன் செல்வம் (வயது 25). கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வழிப்பறி வழக்கில் சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசார் செல்வத்தை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த அவர் அதன் பிறகு தலைமறைவானார். இந்த நிலையில் செல்வத்தை கைது செய்து ஆஜர்படுத்த சேலம் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த செல்வத்தை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்