கோவையில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவையில் 52 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
கோவை,
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கு மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் தொற்று சற்று குறைந்து கோவை மாவட்டத்தில் நேற்று 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 298 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 51 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பினார்கள்.
362 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.