காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்ய சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

Update: 2021-03-12 05:22 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021-ன் போது புதியதாக வாக்காளர் பட்டியலில் முதல் முறையாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் தங்களது செல்லிடப்பேசி எண்ணை வழங்கிய வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) மற்றும் 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த முகாமை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்