சித்தாபுதூர் அய்யப்பசுவாமி கோவில் 52 வது ஆண்டு உற்சவ திருவிழா

கோவை சித்தாபுதூர் அய்யப்பசுவாமி கோவிலில் 52-வது ஆண்டு உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Update: 2021-03-12 04:09 GMT
கோவை,

கோவை சித்தாபுதூரில் உள்ள அய்யப்பசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் உற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 52-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

இரவு 7 மணிக்கு கோவில் தந்திரி பிரம்மஸ்ரீ, பாலக்காட்டில்லத்து சிவபிரசாத் நம்பூதிரி தலைமை தாங்குகிறார். இந்துசமய அறநிலையத்துறை இணை கமிஷனர் செந்தில் வேலன் முன்னிலை வகிக்கிறார்.

14-ந் தேதி திருவிழாவின் 2-வது நாளில் கோவிலில் சிறப்பு பூஜை நடப்பதுடன், நிறைபறை சமர்ப்பித்தல் நிகழ்ச்சியும், அஷ்டபதியாட்டம் என்ற நிகழ்ச்சியும் நடக்கிறது. 

15-ந்தேதி (திங்கட்கிழமை) களபாபிஷேகம் நிகழ்ச்சியும், பக்தி இன்னிசையும் நடைபெறுகிறது.

16-ந் தேதி 4-ம் நாள் பரசுராமன் என்ற தலைப்பில் நாட்டிய நாடக நிகழ்ச்சியும், 17-ந் தேதி பக்தி இன்னிசை நிகழ்ச்சியும், 18-ந் தேதி சிறப்பு தரிசனம், சிறப்பு பூஜையும், அய்யப்பா சேவா சங்கத்தின் 66-வது ஆண்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

19-ந் தேதி திருவிழாவின் 7-ம் நிகழ்ச்சியாக மாலை 6.30 மணிக்கு அய்யப்ப சுவாமி, அலங்கரிக்கப்பட்ட யானை மீது அமர்ந்து செண்டை மேளம், பஞ்சவாத்தியம் முழங்க ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு வி.கே.கே. மேனன்ரோடு வழியாக கோவிலை வந்தடைந்து பள்ளி மண்டபத்தில் பள்ளி உறங்குவார். 

20-ந் தேதி 8-ம் நாள் திருவிழாவையொட்டி மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானை மீது அய்யப்ப சுவாமி அமர்ந்து சின்னசாமி ரோடு, சத்திரோடு, கிராஸ்கட்ரோடு, 100 அடி ரோடு வழியாக ஆறாட்டு குளம் வந்தடைந்து திருக்கோவிலை வந்தடைகிறார். 

மேலும் செய்திகள்