கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வாத்துகள் உயிருடன் மீட்பு
கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வாத்துகள் உயிருடன் மீட்கப்பட்டது.;
அந்தியூர்
அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் பகுதியை சேர்ந்த ரெஜினா மேரி (வயது 48). இவர் தன்னுடைய வீட்டில் 5 வாத்துகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் வாத்துகளை கூண்டில் இருந்து திறந்து விட்டு உள்ளார். அப்போது வாத்துகள் அனைத்தும் பறந்தபடி சென்றன. அதில் 3 வாத்துகள் திடீரென அந்த பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் இல்லாத 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேசுராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 3 வாத்துகளையும் உயிருடன் மீட்டனர்.