திருப்பரங்குன்றம் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை

திருப்பரங்குன்றம் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் டேவிட் அண்ணாத்துரை

Update: 2021-03-11 20:58 GMT
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக டேவிட் அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். பி.ஏ.பி.எல். படித்துள்ள இவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக தொகுப்பாளராக இருந்துள்ளார். மேலும் தலைமை கழக பேச்சாளராக இருந்தார். இதே தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2011 முதல் 2017 வரை 5 ஆண்டுகள் தொடர்ந்து மாவட்ட கவுன்சிலராக இருந்துள்ளார். எம்.ஜிஆர். அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை மற்றும் வேளாண்மை துறை அமைச்சராக இருந்து வந்த காளிமுத்துவின் மகனான இவர் கடந்த 1996 முதல் அ.தி.மு.க. உறுப்பினராக இருந்தார். மதுரை மாநகர் அ.தி.மு.க. மாணவரணி மாவட்ட இணை செயலாளரராகவும், மாநகர் மாவட்ட ஜெயலிலதா பேரவை செயலாளராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ.வின் தலைமையை ஏற்று அ.ம.மு.க.வில் இணைந்தார். இதனையடுத்து 2017-ல் இலக்கிய அணி மாநில செயலாளர், 2018-ல் எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர், 2019-ல் அ.ம.மு.க. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில செயலாளர் உள்பட பல்வேறு கட்சி பதவிகளை வகித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்தநிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக களம் இறங்குகிறார்.

மேலும் செய்திகள்