மண்எண்ணெய் கடத்திய 3 பேருக்கு ஒரு வருட ஜெயில்

மண்எண்ணெய் கடத்திய 3 பேருக்கு தலா ஒரு வருட ஜெயில் தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-03-11 20:47 GMT
ிருதுநகர், 
மண்எண்ணெய் கடத்திய 3 பேருக்கு தலா ஒரு வருட ஜெயில் தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 
வாகன சோதனை 
விருதுநகர்-சிவகாசி மேம்பாலம் அருகே கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். 
அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். வேனில் 1,300 லிட்டர் ரேஷன் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அதனை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார் வேனில் இருந்த சிவகாசியை சேர்ந்த பாலகிருஷ்ணன், ராஜா, விருதுநகரை சேர்ந்த காளிதாஸ் ஆகிய 3 பேைரயும் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். 
ஒரு வருட ஜெயில் 
 இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட் மருதுபாண்டி குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் தலா ஒரு வருட ஜெயில் மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்