பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு

பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு;

Update: 2021-03-11 20:33 GMT
மதுரை
மதுரை கோவில்பாப்பாகுடி, திருமலைநகரை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி கலைச்செல்வி(வயது 35). இவர் மதுரை பொன்மேனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலை முடிந்து வீட்டிற்கு மொபட்டில் விளாங்குடி கண்மாய் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அவரை பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் திடீரென்று கலைச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்