கடையம் அருகே கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
கடையம் அருகே கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கடையம்:
கடையம் அருகே ஏ.பி.நாடானூர் கிராமம் வழியாக பக்கத்து கிராமத்தில் உள்ள தனியார் கிரஷர் நிறுவனத்துக்கு உயர் அழுத்த மின்கம்பிகள் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு ஏ.பி.நாடானூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே ஆழ்வார்குறிச்சி போலீசார் விரைந்து சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள் கூறுகையில், ‘தங்களது கிராமத்தின் வழியாக உயர் அழுத்த மின்கம்பிகள் அமைத்தால், வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்’ என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து அங்கு உயர் அழுத்த மின்கம்பிகள் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.