காளையார்கோவில்,
சிவகங்கை பல்நோக்கு சமூக சேவை சங்கம் மற்றும் மாவட்ட மக்கள் அமைப்பு இணைந்து அகில உலக பெண்கள் தின கருத்தரங்கினை சிவகங்கை பிரிட்டோ மகாலில் நடத்தினர். சங்க செயலாளர் அருட்தந்தை பிரிட்டோ ஜெயபாலன் முன்னிலை வகித்தார்.சிவகங்கை மறை மாவட்ட நிர்வாகி பாக்கியநாதன் தலைமை தாங்கினார். பெண்ணிய எழுத்தாளர் மீனா பெண்களின் சமூக பொருளாதார அரசியலில் பெண்களின் தலைமைத்துவம் பற்றி சிறப்புரை ஆற்றினார்.சங்க நிர்வாகிகள் மிக்கேலம்மாள், ஜெயந்தி, மேனகா ஆகியோர் மதுவின் பாதிப்புகள், பாலியல் பாதிப்புகள், அடிப்படை வசதியின்மை குறித்து பேசினார்கள். அருட்தந்தையர்கள் அமலன், ஆரோக்கிய பிரிட்டோ பிரபு ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். பாலியல் வன்கொடுமைக்கு எதிரான நடவடிக்கை, பூரண மதுவிலக்கு, சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு, நிரந்தர நீர்ப்பாசன வசதி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சிக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கான .மாவட்ட மக்கள் அமைப்பு தலைவி கவிதா மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கஸ்பார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.