வெங்கமேட்டில் ரூ.9 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
வெங்கமேட்டில் ரூ.9 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
பரமத்திவேலூர்,
பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்திவேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு ஏற்றவாறு தேங்காய் பருப்பு மறைமுகமாக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 9 ஆயிரத்து 499 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.139.01-க்கும், குறைந்தபட்சமாக ரூ.114.59-க்கும், சராசரியாக ரூ.128.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11 லட்சத்து 22 ஆயிரத்து 514-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 887 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.134.50-க்கும், குறைந்த பட்சமாக ரூ.125.69-க்கும், சராசரியாக ரூ.131.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்து 62 ஆயிரத்து 54-க்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த வாரத்தை காட்டிலும், இந்த வாரம் தேங்காய் பருப்பு விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.