புதிதாக 8 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று புதிதாக 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மதுரை,
மதுரையில் நேற்று புதிதாக 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 6 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 324 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் மதுரையில் நேற்று 10 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 6 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 58 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். மதுரையில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 461 ஆக உள்ளது.