குமாரபாளையத்தில் ஓட்டலில் மது விற்றவர் கைது; 74 மதுபாட்டில்கள் பறிமுதல்
குமாரபாளையத்தில் ஓட்டலில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 74 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குமாரபாளையம்,
குமாரபாளையம் கத்தேரி பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அனுமதியின்றி மது விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஓட்டலில் அனுமதியின்றியும், கூடுதல் விலைக்கும் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டலில் மது விற்ற வட்டமலை கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 31) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 74 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.