பாளையங்கோட்டையில் யாதவர் சமுதாயத்தினர் ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் யாதவர் சமுதாயத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2021-03-11 19:31 GMT
நெல்லை:

தமிழக சட்டசபை தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, பாளையங்கோட்டை உள்ளிட்ட தொகுதிகளில் யாதவர் சமுதாயத்தினர் அதிகளவில் உள்ளனர். ஆனால் இந்த தொகுதிகளில் யாதவ சமுதாயத்தினர் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

எனவே தென் மாவட்டங்களில் யாதவர் சமுதாயத்தினர் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பாளையங்கோட்டை அழகுமுத்துகோன் சிலை முன்பு யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தென் மாவட்டங்களில் யாதவர் சமுதாயத்தினர் போட்டியிட அ.தி.மு.க. வாய்ப்பு வழங்க வேண்டும். இ்ல்லையெனில் யாதவர் சமுதாய வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்