கடலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த 55 இடங்கள் தேர்வு

கடலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த 55 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.;

Update: 2021-03-11 19:27 GMT
கடலூர், 

தமிழக சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் பொதுக்கூட்டம் நடத்த ஏதுவாக கொரோனா நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி, சட்டசபை தொகுதிகளில் முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதன்படி கடலூர் உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு, மஞ்சக்குப்பம் மைதானம், திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெரு, போடி செட்டி தெரு, புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவில் தெரு ஆகிய 5 இடங்களிலும், விருத்தாசலம் உட்கோட்டத்துக்குட்பட்ட பாலக்கரை, விருத்தகிரீஸ்வரர் கோவில் எதிரே உள்ள மைதானம், பூதாம்பூர், மங்கலம்பேட்டை, பெண்ணாடம், கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி, ஆலடி ஆகிய 7 இடங்களிலும் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்தலாம்.

இடங்கள் தேர்வு

இதேபோல் சிதம்பரம் உட்கோட்ட காவல் நிலை எல்லைக்குட்பட்ட 14 இடங்களிலும், நெய்வேலி எல்லைக்குட்பட்ட 8 இடங்களிலும், சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய உட்கோட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தலா 7 இடங்களிலும் என மாவட்டம் முழுவதும் 55 இடங்களில் அரசியல் கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேற்கண்ட இடங்களில் மட்டுமே கட்சி பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படும். எனவே அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் அனுமதி அளிக்க போதிய கால அவகாசம் அளித்து விண்ணப்பிக்கலாம். அரசியல் கட்சியினர் தங்களுக்கு ஏதுவான இடத்தை குறிப்பிட்டு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்