பயிற்சி செவிலியர் மாயம்

பயிற்சி செவிலியர் மாயமானார்;

Update: 2021-03-11 18:42 GMT
நச்சலூர்
நச்சலூர் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகள் கலைவாணி (வயது 18). இவர் செவிலியர் படிப்பை முடித்துவிட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 9-ந்தேதியன்று மருத்துவமனை செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து மகளை காணவில்லை என குளித்தலை போலீஸ் நிலையத்தில் கந்தசாமி புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கலைவாணியை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்