கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகை

கோவில்பட்டியில் உதவி கலெக்டர் அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டனர்.

Update: 2021-03-11 17:28 GMT
கோவில்பட்டி:
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சிகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டம் குறித்து பா.ஜனதாவுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி, உதவி கலெக்டரை கண்டித்து, அந்த கட்சியினர் உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பா.ஜனதா மாநில பட்டியல் அணி செயலாளர் சிவந்தி நாராயணன் தலைமை தாங்கினார். இதில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். இதையடுத்து உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகானந்தம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்