கோவை அருகே சித்திரைசாவடி தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி பலி

கோவை அருகே சித்திரைசாவடி தடுப்பணையில் மூழ்கி கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-03-11 17:06 GMT
பேரூர்,

கோவை வடவள்ளி அருகே உள்ள நவாவூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 41), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (40). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில் பழனிசாமி தனது நண்பர்களுடன் சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு சென்றார். 
பின்னர் அவர் அங்கு தேங்கி கிடந்த தண்ணீரில் தூண்டில் மூலம் மீன் பிடித்துக்கொண்டு இருந்தார். 

அப்போது எதிர்பாராத விதமாக 10 அடி ஆழம் கொண்ட தடுப்பணையில் தவறி விழுந்து மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், உள்ளே குதித்து அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த தொண்டாமுத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பழனிசாமியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்