முக கவசம் கட்டாயம்

முக கவசம் அணிவதை கட்டாயமாக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது

Update: 2021-03-11 17:00 GMT
முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் பகுதியில் கொரோனா பாதிப்பு மீண்டும் பரவ தொடங்கி உள்ளது. தமிழகம் உள்பட பல மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனைத் தொடர்ந்து முதுகுளத்தூர் முக்கிய இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கோவில்கள், வங்கிகள் மருத்துவமனைகள் உள்பட முகக்கவசம் அணிந்து வருபவர் களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். முககவசம் அணிவது மட்டுமின்றி பேரூராட்சி முன்புபோல் வீதிதோறும் ஆரம்ப காலத்தில் அடித்த கிருமி நாசினியை தெளிக்க வேண்டும் என முதுகுளத்தூர் மற்றும் சுற்றி உள்ள கிராம பொதுமக்கள் சார்பில்கோரிக்கை வலியுறுத்தப் பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்