சாயல்குடி,
சாயல்குடி அருகே குருவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் ரமேஷ் (வயது21). இவர் குருவாடி கண்மாய் அருகே மாடுகளை மேயவிட்டு கண்மாய் தண்ணீரில் இறங்கி உள்ளார். அப்போது கண்மாயில் ஆழமான பகுதியில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சாயல்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னையா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இறந்த ரமேசின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து பெருநாழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.