துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு
தலைஞாயிறில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
வாய்மேடு:
தலைஞாயிறு பகுதியில் துணை ராணுவ படை மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பிற்கு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மகாதேவன், ராஜா முகமது ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், சிறப்பு காவல் படையினர், ஆயுதப்படையினர், ஊர்காவல் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கொடி அணிவகுப்பில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மலர்க்கொடி, செந்தில்குமார் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.