மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது
தொண்டி,
திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 34 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல உதவியாளர்களுக்கான பயிற்சி முகாம் திருவாடானை தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. திருவாடானை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மரகதநாதன் தலைமை தாங்கினார். உதவிதேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் செந்தில்வேல் முருகன் மண்டல அலுவலர்களின் பணிகள் குறித்து பயிற்சிஅளித்தார். இதில் ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் முருகவேலு, தேர்தல் துணை தாசிலதார்கள் ரவி, ராமசுப்பு, துணை தாசில்தார்கள் ஜஸ்டின் பெர்னாண்டோ, சாந்தி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.