பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-03-11 15:19 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் புளிக்காரத்தெருவை சேர்ந்த தெட்சிணா மூர்த்தி என்பவரின் மகன் காளிதாஸ் (வயது28). இவர் 16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொண்டாராம். மேலும், சிறுமியின் விருப்பத்திற்கு மாறாக பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில் குழந்தைகள் நலக்குழுவினர் விரைந்து சென்று விசாரணை நடத்தி புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கைது செய்தனர். அவரின் தந்தை மற்றும் சிறுமியின் தாயை போலீசார் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்