திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகாசிவராத்திரி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-03-11 15:01 GMT
கருணாகரேஸ்வரர்
திருவாரூர்:-
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
மகா சிவராத்திரி விழா
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று இரவு முதல் விடிய, விடிய 4 கால பூஜை நடந்தது. இதையொட்டி வன்மீகநாதர், மரகதலிங்கம், அசலேஸ்வரருக்கு அபிஷேகம் நடந்தது. 
பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கமலாலயம் குளத்தின் நடுவில் அமைந்துள்ள நாகநாதசாமி கோவிலில் மகாசிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. திருவாரூர் புதுத்தெருவில் உள்ள கருணாகரேஸ்வரர் கோவிலில் சாமிக்கு சிறபபு அபிஷேகம் நடந்தது. 
கருணாகரேஸ்வரர்
இதையடுத்து கருணாகரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்காரவாசல் தியாகராஜர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் நேற்று மகா சிவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

மேலும் செய்திகள்