ஆவணங்கள் இன்றி மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

ஆவணங்கள் இன்றி மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்படட ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-11 15:01 GMT
திருத்துறைப்பூண்டி:-
திருத்துறைப்பூண்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
சட்டசபை தேர்தல்
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் ஓட்டுக்காக பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பறக்கும் படை அமைக்கப்பட்டு, தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. 
வாகன சோதனை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாச்சிகுளம் பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுப்பிரமணியன், திருத்துறைப்பூண்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பநாதன் மற்றும் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்வது தெரிய வந்தது. 
ரூ.1 லட்சம் பறிமுதல்
இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் திருத்துறைப்பூண்டி தேர்தல் நடத்தும் துணை அலுவலரும், தாசில்தாருமான ஜெகதீசனிடம் ஒப்படைக்கப்பட்டது. பணத்துக்குரிய ஆவணங்களை காட்டினால் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என தேர்தல் நடத்தும் துணை அலுவலர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்