கூத்தாநல்லூர் அருகே பள்ளத்தில் விழுந்த மாடு மீட்பு

பள்ளத்தில் விழுந்த மாடு மீட்கப்பட்டது.;

Update:2021-03-11 20:30 IST
கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர்‌ அருகே உள்ள கமலாபுரம் கருப்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 50). விவசாயி. இவருடைய மாடு ஒன்று அதே பகுதியில் உள்ள மேடான பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மாடு பள்ளத்தில் தவறி விழுந்தது. இதனால் மாடு காயம் அடைந்து மயங்கியது.

 இதையடுத்து அன்பழகன் அங்கு சென்று பள்ளத்தில் விழுந்த மாட்டை மீட்க முயன்றார். ஆனால் மாட்டை மீட்க முடியவில்லை. இதை அறிந்த கூத்தாநல்லூர் தீயணைப்பு படை வீரர்கள் நிலைய அலுவலர் (பொறுப்பு) பரமசிவம் தலைமையில் அங்கு விரைந்து சென்று மாட்டை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் காயம் அடைந்த மாட்டினை சரக்கு ஆட்டோவில் ஏற்றி ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் செய்திகள்