ஏலச்சீட்டு மோசடி வழக்கில் பா.ஜ.க. பிரமுகர் மனைவியுடன் கைது
ஏலச்சீட்டு மோசடி வழக்கில் பா.ஜ.க. பிரமுகர் மனைவியுடன் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 58). பா.ஜ.க. பிரமுகரான இவர், தன்னுடைய மனைவி கனகதுர்காவுடன் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தியதாக தெரிகிறது. ஏலச்சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் லட்சக்கணக்கில் ஏமாற்றியதாக இவர் மீதும், இவருடைய மனைவி மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் கூடுதல் துணை கமிஷனர் சரவணகுமார், உதவி கமிஷனர் வேல்முருகன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். சீனிவாசனும், அவருடைய மனைவி கனகதுர்காவும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இன்னொரு மோசடி வழக்கில் சீனிவாசன் முன்ஜாமீன் வாங்கி இருப்பதாக தெரிகிறது.