சென்னை விமான நிலையத்தில் ஊழியர்கள் உண்ணாவிரதம்

சென்னை விமான நிலையத்தில் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-03-11 13:05 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பணியாற்றும் விமான நிலைய ஆணையக ஊழியா்கள், தங்களுக்கு ஊதிய உயா்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை விமான நிலைய நிா்வாக அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு விமான நிலைய ஆணையக ஊழியர்கள் சங்க தென் மண்டல செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்். இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் விமான ஆணையக ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் உணவு இடைவெளியின்போது ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்