தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் சேலம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் சேலம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு நடத்தினர்.
கொளத்தூர்,
கொளத்தூர் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மற்றும் தமிழக கர்நாடக மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ராமன், போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் ஆகியோர் நேற்று ஆய்வு நடத்தினர். கொளத்தூர் வட்டாரத்தில் பதற்றமான வாக்குச்சாவடி எனக்கருதப்படும் கருங்கல்லூர் வாக்குச்சாவடி மற்றும் காரைக்காடு சோதனைச்சாவடி, தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு சோதனைச் சாவடி ஆகிய இடங்களில் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது மேட்டூர் உதவி கலெக்டர் சரவணன், போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர். சட்டசபை தேர்தலையொட்டி அங்கு உள்ள நிலவரங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.