செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 53 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 786 பேர் உயிரிழந்துள்ளனர். 351 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 53 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 332-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 52 ஆயிரத்து 195 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 786 பேர் உயிரிழந்துள்ளனர். 351 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 34 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 656 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 29 ஆயிரத்து 113 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 449 பேர் உயிரிழந்துள்ளனர். 94 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 44 ஆயிரத்து 472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 43 ஆயிரத்து 567 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 205 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 700 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.