காஞ்சீபுரத்தில் மாதிரி வாக்குப்பதிவு மையம் கலெக்டர் திறந்து வைத்தார்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.;

Update: 2021-03-11 06:46 GMT
காஞ்சீபுரம், 

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதை உறுதி செய்யும் வகையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளின் மூலம் தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்டம் மகளிர் திட்டம் சார்பில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களை கவரும் வகையில் அச்சமின்றி வாக்குப்பதிவு செய்வதில் பயிற்சி பெறும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரி வாக்குப்பதிவு மையத்தை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திறந்து வைத்து வாக்குப்பதிவை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயசுதா, மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசராவ், பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மற்றும் முதல்முறை வாக்காளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்