பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை வழங்கவேண்டும்- ஓய்வு பெற்ற அதிகாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை வழங்கவேண்டும் என்று ஓய்வு பெற்ற அதிகாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-03-10 21:55 GMT
திருச்சி,
அகில இந்திய ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்க கூட்டம் திருச்சியில் நடந்தது. ஓய்வு பெற்ற முதன்மை கணக்கு அதிகாரி கருப்பையா தலைமை தாங்கினார். சங்கத்தின் மாநில ஆலோசகர் எஸ். காமராஜ் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அதிகாரிகள் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் சிவகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சரவை எடுத்த புத்தாக்க முடிவின்படி 4ஜி அலைக்கற்றையை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு உடனடியாக வழங்கவேண்டும், ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும், பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 3-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் சங்கத்தின் தமிழ் மாநில தலைவராக சந்திரசேகரன், மாநில செயலாளராக எஸ். காமராஜ், நிதித்துறை செயலாளராக குருபிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்