திருச்சி மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் சீனிவாசன் அ.தி.மு.க.வில் இணைந்தார்
திருச்சி மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் சீனிவாசன் அ.தி.மு.க.வில் இணைந்தார்
திருச்சி,
திருச்சி மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் சீனிவாசன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
திருச்சி மாநகர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளராக இருந்தவர் சீனிவாசன். திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயராகவும், பொறுப்பு மேயராகவும் பதவி வகித்து வந்த இவர் நேற்று திடீரென அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சென்னையில் சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார்.
அப்போது அவருடன் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உடனிருந்தார். சீனிவாசன் அ.தி.மு.க.வில் ஏற்கனவே ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர். தொடர்ந்து 3 முறை அ.தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் ஆகவும் இருந்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து இவர் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.