அரியமங்கலத்தில் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது

அரியமங்கலத்தில் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-03-10 21:55 GMT
பொன்மலைப்பட்டி,
திருச்சி மேல அம்பிகாபுரம் நேருஜி தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 35). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டின் அருகே வசித்து வருபவர் முபாரக் அலி (29). நேற்று காலை இவரது மகன், குணசேகரன் வீட்டில் இருந்த செடியை பிடுங்கி வீசியதாக கூறப்படுகிறது. இதனால் குணசேகரனுக்கு, முபாரக் அலிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முபாரக் அலியின் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களான சோமரசம்பேட்டையை சேர்ந்த அப்துல் கபூர் (29), தாஜூதீன் (26) மற்றும் முபாரக் அலி ஆகிய 3 பேரும் சேர்ந்து குணசேகரனை பலமாக தாக்கியுள்ளனர். பலத்த காயம் அடைந்த குணசேகரன் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து குணசேகரன் அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து முபாரக் அலி, அப்துல் கபூர், தாஜூதீன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்