காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

பூதப்பாண்டி அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-03-10 21:46 GMT
பூதப்பாண்டி:
பூதப்பாண்டி அருகே காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாலிபர்
பூதப்பாண்டியை அடுத்த அருமநல்லூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருடைய மனைவி லலிதா. இவர்களுக்கு 1 மகளும், 2 மகன்களும் இருந்தனர். 
பிரான்சிஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருடைய மூத்த மகன் பிரின்ஸ் (வயது 27), தொழிலாளி. இவர் எட்டாமடை பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தார். 
இந்த நிலையில் மாணவியை திருமணம் செய்து தருமாறு அவரது உறவினர்களிடம் பிரின்ஸ் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மாணவியின் உறவினர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இதனால் பிரின்ஸ் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். 
 தற்கொலை
இந்த நிலையில் சம்பவத்தன்று பிரின்ஸ் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த தாயார் லலிதா உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரின்ஸை மீட்டு பூதப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். 
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பிரின்ஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்ைத ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்