பழனி முருகன் கோவில் செயல் அலுவலர் இடமாற்றம்
பழனி முருகன் கோவில் செயல் அலுவலரான கிராந்திகுமார்பாடி மாற்றப்பட்டு உள்ளார்.
பழனி:
பழனி முருகன் கோவில் செயல் அலுவலரான கிராந்திகுமார்பாடி, தேர்தல் பணிக்காக அசாம் மாநிலத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
இதையடுத்து மதுரை மண்டல இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையாளராக உள்ள குமரதுரை, பழனி கோவில் இணை ஆணையாளராக (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.