சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது.;
அண்ணாமலை நகர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தெற்கு வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 40-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று தொடங்கியது. விழாவை சென்னை நாட்டிய கலைஞர் கலைமாமணி நந்தினி ரமணி தொடங்கி வைத்தார். விழாவில் லக்னொவ் சின்மயி பிஸ்வாஸ், சாக்க்ஷி பிஸ்வாஸ், சென்னை நாட்டிய கலைஞர் கலைமாமணி நந்தினி ரமணி மற்றும் பார்வதி ரவிகண்டசாலா, சுஷாமா ரங்கநாதன், திவ்யசேனா ஹரிபாபு, பத்மினி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
சென்னை பரதநாட்டியாலயா மாணவிகளின் பரதம், ஹைதராபாத் அஸ்ரிதா சிந்தே, யாஷ்வினி ஸ்ரீ கடே ஆகியோரின் குச்சுப்புடி, கோவை சுபிக்க்ஷா சுந்தரராமனின் பரதநாட்டியம் ஆகியவையும் நடந்தது. இதையடுத்து பரதநாட்டிய கலைஞா்களுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டி பரிசு வழங்கினார்.