நாமகிரிப்பேட்டை அருகே மதுபாட்டில்களை கடத்தியவர் கைது
நாமகிரிப்பேட்டை அருகே மதுபாட்டில்களை கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல்,
நாமக்கல் மதுவிலக்கு போலீசார் நேற்று நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மெட்டாலா சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். இந்த சோதனையின் போது அந்த மொபட்டில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 105 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், மொபட்டை ஓட்டி வந்த சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் கிழக்குகாடு பகுதியை சேர்ந்த முனியமுத்து (வயது35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.