வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு
வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு;
நாகமலைபுதுக்கோட்டை
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடி அண்ணா பல்கலைக்கழகத்தில் எண்ணப்பட உள்ளது. அதற்காக வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அன்பழகன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி ஆகியோர் உடனிருந்தனர்.