பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம்

காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளையில் பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம் நடந்தது.

Update: 2021-03-10 20:15 GMT
காரைக்குடி,

காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளையில் பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம் நடந்தது. தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, ரிசர்வ் வங்கி பரிந்துரையின்படி கிழிந்த மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம் நடைபெற்றது. நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த முகாமில் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பழைய கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுக்களை சமூக இடைவெளியை கடைபிடித்து பெற்றுக்கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை காரைக்குடி கிளை வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்