கல்லூரி மாணவிகள் முடிதானம் செய்யும் நிகழ்ச்சி
கல்லூரி மாணவிகள் முடிதானம் செய்யும் நிகழ்ச்சி
எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக மகளிர் தினத்தையொட்டியும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வகையிலும், தனியார் அமைப்பினர் உதவியுடன் கல்லூரி மாணவிகள் முடிதானம் செய்யும் நிகழ்ச்சி நேற்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதில் இந்திய மருத்துவ கழகத்தின் மகளிர் குழுமம் சார்பாக, டாக்டர் பாரதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இதன் பின்னர் முடிதானம் செய்யும் நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் எழிலி தொடங்கிவைத்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் தன்னார்வத்துடன் வந்து, உற்சாகமாக முடிதானம்செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் சுகந்தி, சிவமணி ஆகியோர் செய்திருந்தனர்.