தி.மு.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்
திருப்புவனத்தில் தி.மு.க.பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருப்புவனம்,
இதில் மாவட்ட கழக துணைச்செயலாளர் சேங்கைமாறன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் 80 வயதான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து நேரடியாக தபால் வாக்குகள் அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய, கிளைக்கழக, வட்ட கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.