உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3 லட்சம் பறிமுதல்

Update: 2021-03-10 19:41 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம்-விராலிப்பட்டி சாலையில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.  அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, செங்காட்டுப்பட்டியை சேர்ந்த விஜய் என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 600-ஐ தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர். இதேபோல, பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோனேரிபாளையம் நான்கு ரோடு சந்திப்பில் நேற்று மதியம் பெரம்பலூர் கனிமம் மற்றும் சுரங்கத்துறை துணை தாசில்தார் பாக்கியராஜ் தலைமையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பெரம்பலூர் அருகே உள்ள பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்த ராமநாதன் என்கிற ராமதாஸ் (வயது 52) என்பவரிடம் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 500 இருந்தது.  ஆனால், அந்த பணம் கொண்டு செல்வதற்கான ஆவணம் எதுவும் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் பெரம்பலூர் சப்-கலெக்டரும், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பத்மஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்