தி.மு.க.வுக்கு ஒதுக்க கோரி தீக்குளிக்க முயன்ற தொண்டரால் பரபரப்பு

அறந்தாங்கி தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க கோரி தீக்குளிக்க முயன்ற தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-03-10 19:39 GMT
அறந்தாங்கி, மார்ச்.11-
அறந்தாங்கி தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க கோரி தீக்குளிக்க முயன்ற தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியில் கடந்த 2 சட்டமன்ற தேர்தலின் போது, தி.மு.க.கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இந்தநிலையில் வருகிற தேர்தலில் அறந்தாங்கி தொகுதி தோழமை கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக தி.மு.க.தொண்டர்கள் இடையே தகவல் பரவியது.
இதைஅறிந்த தி.மு.க.தொண்டர்கள் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி அறந்தாங்கியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ராமநாதன் தலைமை தாங்கினார். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அறந்தாங்கி தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க.தொண்டர் ராஜா என்பவர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி, அறந்தாங்கி தொகுதியை தி.மு.க.வுக்கு வழங்க வேண்டும் என கோஷமிட்டவாறு தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், ராஜா மீது தண்ணீர் ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்