கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு

Update: 2021-03-10 19:36 GMT
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமத்தில் இருந்து ரெங்காநாதபுரம் செல்லும் சாலையில் உள்ள குணசேகரனுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நேற்று காலை ஆண் மயில் ஒன்று தவறி விழுந்து, தண்ணீரில் தத்தளித்தவாறு உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றுக்குள் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த மயில் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்