நெல்லையில் விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சாவு
நெல்லை அருகே விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.;
நெல்லை:
நெல்லையை அடுத்த பொன்னாக்குடி இளங்கோவடிகள் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 60). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பொன்னாக்குடி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கணேசன் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.