மதுரையில் 9 பேருக்கு கொரோனா

மதுரையில் 9 பேருக்கு கொரோனா

Update: 2021-03-10 19:29 GMT
மதுரை
மதுரையில் நேற்று புதிதாக 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 7 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 318 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் மதுரையில் நேற்று 9 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் 6 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 795 ஆக அதிகரித்துள்ளது. இவர்களை தவிர 62 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். மதுரையில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 461 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்