மகளிர் சுய உதவிக்குழுவினர் விழிப்புணர்வு ஊர்வலம்

பெரம்பலூர்
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதனை வலியுறுத்தி மகளிர் சுய உதவிக்குழுவினரின் விழிப்புணர்வு ஊர்வலம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஸ்ரீவெங்கடபிரியா, சப்-கலெக்டர் பத்மஜா முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டு 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதனை வலியுறுத்தும் வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலம் வெங்கடேசபுரம், ரோவர் வளைவு, சங்குபேட்டை, காமராஜர் வளைவு வழியாக சென்று பெரம்பலூர் தாசில்தார் அலுவலகத்தில் முடிவடைந்தது. இதேபோல, சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி அரியலூர் பஸ் நிலையத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த மகளிர்கள் கலந்து கொண்ட மனித சங்கிலி ஊர்வலத்தை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ரத்னா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மனித சங்கிலி ஊர்வலம் நகரின் முக்கிய பகுதிகளில் வலம் வந்தது. முன்னதாக அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.